கள்ளச்சாராய விற்பனை - போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
. பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் பெரம்பலூர் மற்றும் மங்களமேடு உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா, போன்றவைகள் தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதில் கள்ளச்சாராயம் தயாரிப்பது, ஊறல் போடுவது, விற்பனை செய்வது ஆகியவை குறித்தும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் மளிகை கடைகள் அவற்றின் உரிமையாளரின் வீடுகளில் பதிக்க வைக்கப்பட்டுள்ளதாக என்றும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தீவிர தேடுதல் வேட்டையில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள வளவன் மற்றும் மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தனசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.