ரசாயனம் கலந்த பழச்சாறுகள் விற்பனை: நடவடிக்கை பாயுமா..?

ரசாயனம் கலந்த பழச்சாறுகள் விற்பனை: நடவடிக்கை பாயுமா..?

கோப்பு படம் 

தூத்துக்குடியில் ரசாயனம் கலந்த பழங்கள், பழச்சாறு விற்பனையை தடுக்க  உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கடும் உஷ்ணத்தை தணித்துக்கொள்ள மக்களில் பலர், உடல் சூட்டை தணிக்கும் அவசரத்திலும், பழத்தை சுவைக்கும் பரவசத்திலும் கண்ணெதிரே இருக்கும் ஓர் ஆபத்தைக் காணாமல் கடந்து செல்கிறார்கள்.

தாகம் தணிக்க நாம் உண்ணும் தர்பூசணி முதலிய பழங்களிலும், பருகும் பழச்சாறுகளிலும் இரசாயனம் கலப்படம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரசாயன மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இப்பழங்களை வாங்கி பொதுமக்கள் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு உடல் நலக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இரசாயன பொடிகள் கலக்கப்பட்ட குளிர்பானங்கள், பழரசங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை வெய்யில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் தாகத்தை தணிக்க குளிர்பானங்களை அதிகளவில் பருகி வருகின்றனர். ஆனால் குளிர்பானங்களில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.

எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த பழங்கள், குளிர்பானங்கள் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவராம் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story