ரேஷன் கடைகளில் தேங்காய்-கடலை எண்ணெய் விற்பனை

ரேஷன் கடைகளில் தேங்காய்-கடலை எண்ணெய் விற்பனை

ரேஷன் கடைகளில் தேங்காய்-கடலை எண்ணெய் விற்பனை

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க ரேஷன் கடைகளில் தேங்காய், கடலை எண்ணெய் விற்பனை செய்ய விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் விவசாயிகள்மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளின் பல கோரிக்கைகள் இடம் பெறாமல் உள்ளது. நெல்லுக்கும், கரும்புக்கும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இடுபொருட்கள் விலை ஏற்றம், ஆட்கள் கூலி உயர்வு போன்ற காரணங்களால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000-ம் உயர்த்த வேண்டியும், தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் 10 ஆண்டுகளாக பாதித்து தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில் உள்ளனர். எனவே, மலேசியா, இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை 3 ஆண்டுகளாக விவசாயிகள் வைப்பதால் வருகிற வேளாண் பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story