காரிமங்கலத்தில் 8 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனை
காரிமங்கலம் தேங்காய் வார சந்தையில் தேங்காய் வரத்து சரிவால் விலை அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, தட்ரஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர்.
சுமார் 70 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அளவை பொறுத்து 8 முதல் 14 வரை விற்பனையானது. இதன் மூலம் 8 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரங்களை காட்டிலும், வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. வரும் வாரங்களில் விலை மேலும் அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது