தென்னந்தோப்பில் கள் விற்பனை: காவல்துறை வழக்கு பதிவு

தென்னந்தோப்பில் கள் விற்பனை: காவல்துறை வழக்கு பதிவு

காவல் நிலையம்

தென்னந்தோப்பில் சட்டவிரோத கள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து 7லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதியில் உள்ள சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கள் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்,

கரைகண்டார்குளம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் வயது 60 என்பவரை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 7லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். பின்னர், கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story