கஞ்சா விற்பனை - பெண் உட்பட இருவர் கைது
காவல் நிலையம்
தேனி அருகே ஓடைப்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஓடைப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ரோந்து பணி சென்றனர். அப்போது வெள்ளையம்மாள் புறம் சுடுகாடு அருகே அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுத்தாய் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். காவல்துறையினர் அவர்களை சோதனை இட்டு அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் விற்பனை செய்த பணம் 7443 ரூபாய் ஆகியவற்றை கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர்
Next Story