சந்தைப்பேட்டை ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை
தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 38 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது..
தர்மபுரி சந்தைப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக ஆட்டுச் சென்று நடைபெற்று வருகின்றது இன்று காலை 6 மணிக்கு கூடிய ஆட்டுச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான சோலை கொட்டாய் . செட்டிகரை, நல்லம்பள்ளி,குள்ளனூர், குண்டலபட்டி, நார்த்தம்பட்டி,அதியமான் கோட்டை, தடங்கம்,ஒட்டப்பட்டி,வெண்ணாம்பட்டி, பெரியாம்பட்டி,மாட்லாம்பட்டி,ராஜா பேட்டை, லளிகம், போன்ற பகுதியில் இருந்து ஆடுகளின் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2,000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 18,000 ஆயிரம் வரை விற்பனையானது சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 38லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story