தபால் நிலையங்களில் தங்கப்பத்திரம் விற்பனை துவக்கம்

தபால் நிலையங்களில் தங்கப்பத்திரம் விற்பனை துவக்கம்

தங்கபத்திரம்

தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தலைமை மற்றும் 30 துணை தபால் அலுவலகம் மூலம் தங்கப் பத்திரம் விற்பனை நடக்கிறது.

தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தலைமை மற்றும் 30 துணை தபால் அலுவலகம் மூலம் தங்கப் பத்திரம் விற்பனை நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தர்ம புரி தலைமை அஞ்சலகம், 30 துணை அஞ்சலகங்களிலும் தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒருவர் ஒரு கிராம் முதல், 4 ஆயிரம் கிராம் வரை வாங்கலாம். தங்கப் பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

8 ஆண்டுகள் இறுதியில், அன்றைய தேதியில் உள்ள மதிப்பில், தங்கப் பத்திரங்ளை பணமாக மாற்றிக் கொள்ளலாம். தேவை பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, தங்கப் பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

இந்த திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் செய்யப்ப டும் முதலீட்டுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் மூல மாக 2.5 சதவிதம் வட்டி கணக்கிட்டு, ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இது தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும். இந்த திட்டம் வருந்த 12ம்தேதி முதல் வரை தர்மபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்க ளிலும் செயல்படுத்தப்படும்.

அஞ்சலகங்களில் தங்கப் பத்திரத்தில் பணம் செலுத்துபவருக்கு, அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமார் 15 நாட்களுக்கு பிறகு தங்கப் பத்திரம் வழங்கப்படும். இதில் முதலீடு செய்ய, முத லீடு செய்பவரின் ஆதார் எண், பான் எண் மற்றும் வங்கி கணக்கு கட்டா யம். தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்தாமல் தங்கத்தை சேமிக்க முடியும். இவ்வாறு செய் திக்குறிப்பில் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளர்.

Tags

Next Story