குட்கா விற்பனை - 3 பேர் கைது
கைது
சிவகாமிபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகாமிபுரம் அருகே எஸ்ஐ டேவிட் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்கு அந்த வழியாக வந்தவர்கள் 3 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி வந்த கீழப்பாவூர் சேர்ந்த பூமாடன் முருகன் (34), ஆரியங்காவூர் சத்தியமூர்த்தி (36), அரியப்பபுரம் முருகன் (40) ஆகிய மூன்று நபர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தும் சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story