தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை - வணிக நிறுவனத்துக்கு சீல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை - வணிக நிறுவனத்துக்கு சீல்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த வணிக நிறுவனத்துக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

காரையூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சதாம் உசேன் என்பவரது மளிகை கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காரையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன் குமார் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Tags

Next Story