கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை!
கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை!
பழநி முருகன் கோயிலில் தயாரிப்பு தேதி இல்லாமல் காலாவதியாகிய பின்னரும் விற்பனை செய்யப்படும் பிரசாதம். இதனை பேரவை நிர்வாகி செந்தில் குமார் என்பவர் குற்றம் சாட்டினார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக பஞ்சாமிர்தம், லட்டு, முறுக்கு, அதிரசம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒன்றான பஞ்சாமிர்தத்திற்கு ஜிஐ டேக் என்ற புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம், 15 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில், தயாரிப்பு தேதி இல்லாமல் காலாவதியாகிய பின்னரும் விற்பனை செய்யப்படுவதாக ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை நிர்வாகி செந்தில் குமார் என்பவர் குற்றம் சாட்டினார்.
Next Story