புகையிலை, பிளாஸ்டிக் விற்பனை - ரூ.1.65 லட்சம் அபராதம்
விருதுநகரில் தடை செய்யப்பட்ட குட்கா, பிளாஸ்டிக் விற்பனை செய்த 45 பேருக்கு ரூ.1.65 லட்சம் அபராதம் விதித்து, 7 கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
விருதுநகரில் டிசம்பர் 1 முதல் 29 வரை புகையிலை, பிளாஸ்டிக் விற்பனை செய்ததற்காக ரூ.1.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 7 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. தடை புகையிலை விற்ற 25 நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை பிளாஸ்டிக் பயன்படுத்திய 18 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2 கடைகளுக்கு ரூ.4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 29 நாட்களில் புகையிலை பிளாஸ்டிக் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ.1.65 லட்சம் அபராதம் விதித்து வசூலித்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அம்ஜத் இப்ராகிம் கான் தெரிவித்தார்.
Next Story