புகையிலை பொருட்கள் விற்பனை : உணவு பாதுகாப்பு துறை அதிரடி

புகையிலை பொருட்கள் விற்பனை : உணவு பாதுகாப்பு துறை அதிரடி

கோப்பு படம்

பழனியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பழநியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 13 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பழநி புறநகர் மற்றும் தொப்பம்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பழநி புறநகர் மற்றும் தொப்பம்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதையடுத்து அதிகாரிகள் 13 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story