உரல், ஆட்டுக்கல் அம்மி கல் விற்பனை
உரல், ஆட்டுக்கல் அம்மிகல் விற்பனை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியிலிருந்து சரக்கு வாகனத்தில் உரல், அம்மிக்கல் மற்றும் ஆட்டுக்கல் ஆகியவற்றை கொண்டு வந்து, தர்மபுரி மாவட்டம் தர்மபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், உள்ளிட்ட கிராமம் மற்றும் நகர் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு தெருவாக சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, கிரைண்டர், மிக்சி பயன்பாட்டில் உள்ளதால், உரல், ஆட்டுக்கல்லை யாரும் பயன்படுத்துவது இல்லை. ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்வதால் இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மக்களிடையே பாரம்பரிய உணவு பழக்கம் அதிகரித்து உள்ளதால், இந்த ஆட்டுக்கல், அம்மி ஆகியவற்றை வாங்குவதும் அதிகரித்துள்ளது. சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் உரல், அம்மி பயன்படுத்த மக்கள் விரும்புகின்றனர். மேலும் வீடுகளில் உரல், அம்மிக்கல் வைத்திருப்பது நல்லது என மக்கள் நினைப்பதால்,விற்பனை அதிகரித்து உள்ளது. ஆட்டுக்கல், உரல் ஆகியவை மரம் மற்றும் ஸ்டீல் கைப்பிடி பொருத்தப்பட்டுள்ளது. கல்லின் அளவை பொருத்து உரல் ரூ.1000 முதல் ரூ.3000 வரையும், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் உடைக்க பயன்படுத்தும் சிறிய உரல் ரூ.250 முதல் ரூ.550 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
Next Story