சேலம் மாவட்டத்தில் ரூ.1.45 கோடிக்கு காய்கறி விற்பனை
விற்பனைக்கு வந்த காய்கறிகள்
சேலம் மாவட்டத்தில் வைகாசி அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.1.45 கோடிக்கு காய்கறிகள் விற்பனை ஆனது
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர், இளம்பிள்ளை, எடப்பாடி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆட்டையாம்பட்டி, தம்மம்பட்டி, மேச்சேரி, வாழப்பாடியில் உழவர் சந்தைகள் உள்ளன.
நேற்று வைகாசி அமாவாசையையொட்டி காய்கறிகள் அதிகம் விற்பனையாகின. அதன்படி சூரமங்கலம் உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள், பூக்கள் ரூ.23 லட்சத்து 65 ஆயிரத்து 325-க்கு விற்பனை ஆனது. அதேபோல் தாதகாப்பட்டியில் ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 525-க்கும், அஸ்தம்பட்டியில் ரூ.12 லட்சத்து 21 ஆயிரத்து 808-க்கும், அம்மாபேட்டையில்,
ரூ.13 லட்சத்து 8 ஆயிரத்து 65-க்கும் விற்பனை ஆகின. மொத்தம் மாவட்டத்தில் உள்ள 13 உழவர் சந்தைகளில் ரூ.1 கோடியே 45 லட்சத்து 43 ஆயிரத்து 737-க்கு காய்கறிகள் விற்பனையாகி உள்ளன.
Next Story