கத்தி முனையில் வழிப்பறி செய்தவர் கைது

கத்தி முனையில் வழிப்பறி செய்தவர் கைது

சேலம் வழிப்பறி செய்தவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

சேலம் அருகே கத்தியை காட்டி வழிப்பறி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (58). இவர் நேற்று சேலம் காந்தி ஸ்டேடியம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை 3பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.300ஐ பறித்துச் சென்றனர். இதுபற்றி ராஜா, அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கிச்சிப்பாளையம் நாராயணன் நகரைச்சேர்ந்த பிரகாஷ் என்ற சொட்டை பிரகாஷ் (37), அவரின் கூட்டாளிகள் 2 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரகாசை கைது செய்த போலீசார். கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story