சேலம் விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு: அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

சேலம் விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு: அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

சேலம் விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தும்பிபாடி பகுதியில் விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார்கள் வல்லமுனியப்பன், மகேஸ்வரி, காடையாம்பட்டி தாசில்தார் ஹசீனா பானு ஆகியோர் கலந்து கொண்டு தும்பிபாடி ஊராட்சி விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்துவது,

குறித்து கருத்து கேட்டனர். அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தங்கள் நிலத்தை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் இரும்பாலையில் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாகவும்,

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அங்கு விமான நிலையத்தை அமைத்து கொள்ளுங்கள் என விவசாயிகள் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசும்போது, அங்குள்ள நிலங்களுக்கான அரசு மதிப்பீட்டை விட 3 மடங்கு அதிக பணம் வழங்குவதாகவும், இதனால் அரசுக்கு நிலத்தை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து விவசாய நிலத்தை கொடுத்துவிட்டால் வேறு நிலம் வாங்க முடியாது எனக்கூறி தொடர்ந்து அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் கையகப்படுத்தும் விவசாய நிலத்திற்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு ரூ.2 கோடி இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதையடுத்து அவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட அதிகாரிகள், இதுபற்றி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags

Next Story