சேலம் அழகாபுரம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா !

சேலம் அழகாபுரம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா !

செயின்ட் ஜான்ஸ் பள்ளி 

சேலம் அழகாபுரம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழாவில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் பங்கேற்பு.
சேலம் அழகாபுரம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 34 -வது ஆண்டு விளையாட்டு விழா 'எஸ்ப்பிரிண்ட்டா- 2024' என்ற தலைப்பில் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் ஆ.ஜோதி பெர்னாண்டோ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் கலந்து கொண்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் கவுரவ விருந்தினர்களாக சேலம் மறை மாவட்ட முதன்மை குரு டி.மைக்கேல்ராஜ் செல்வம், சேலம் மறை மாவட்ட வேந்தர் ஏ.ஜேக்கப், சேலம் மறை மாவட்ட முதன்மை குரு அ.அழகு செல்வம், செவ்வாய்பேட்டை பேராலய பங்கு தந்தை ஜெயராக்கினி, சேலம் மறை மாவட்ட மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தாளாளர் டி.ஜான்கென்னடி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவுக்கு வந்த ஆணையாளர் பாலச்சந்தருக்கு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story