மேட்டூரில் பத்ரகாளியம்மன் கோவிலில் பெரிய தேரோட்டத்தில் பக்தர்கள்
மிக பழமையான தேரோட்ட விழாவில் பங்கேற்ற பக்தர்கள் வழிபாடு
மேட்டூர் அருகே மேச்சேரியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். சேலம் மாவட்டத்தில் மிகவும் ரசித்தி பெற்ற இக்கோவிலில் மாசி மக திருத்தேரோட்டம் முக்கியமான விழாவாகும்.
இந்த விழா அதிகாலை கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. வெள்ளிக்கிழமை மாலை சின்ன தேரோட்டம் துவங்கியது. சனிக்கிழமை பெரியதேரோட்டம் நடைபெற்றது. தேர் மேற்கு ரதவீதி கிராமச் சாவடி அருகே நிலை சேர்ந்தது.
இந்நிலையில் மாலை பெரியத்தேர் கிராமச் சாவடியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நிலை சேர்ந்தது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திங்கள் கிழமை சத்தாபரணமும், புதன்கிழமை திருக் கொடியிறக்கம் மஞ்சள் நீராட்டம் நடைபெறுகிறது.
Next Story