பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 
பாரத ஸ்டேட் வங்கி முன் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தேர்தல் பத்திர சட்டம் விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மத்திய பாஜக அரசு 2017 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடையாக பெறுவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் பாஜக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றன. இது தொடர்பான வழக்கில் கட்சிகள் நன்கொடை பெற்ற விவரங்களை கடந்த 3 ம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

அதன் விவரங்களை வழங்க தாமதம் காட்டும் நிலையில் மத்திய அரசின் தூண்டுதலால் பாரத ஸ்டேட் வங்கி மூன்று மாத காலம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் இந்த செயலை கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் பாரத ஸ்டேட் வங்கி முன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story