சேலம் மாநகராட்சி 9-வது வார்டில் நகர சபா கூட்டம்
நகர சபை கூட்டம்
சேலம் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட வாய்க்கால் பட்டறை பகுதியில் கமிட்டி மற்றும் சபை கூட்டம் நேற்று நடந்தது. வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் தலைமை தாங்கினார். மாநகராட்சி தொழில் நுட்ப அலுவலர் ஸ்ரீதர், வரி வசூலிப்பர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். அப்போது கூட்டத்தில் கவுன்சிலர் தெய்வலிங்கம் வார்டு மக்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் சாக்கடை, சாலை வசதி செய்து தர பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றார்.
Next Story