ரூ.43.50 லட்சத்திற்கு ஏலம் போன பருத்தி..!

ரூ.43.50 லட்சத்திற்கு ஏலம் போன பருத்தி..!

ரூ.43.50 லட்சத்துக்கு ஏலம் போன பருத்தி  

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம்.

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 43.50லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் விடப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது. பருத்தி ஏலத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சுமார் 1700 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம் 375 லாட்டுகளாக வைத்து ஏலம் விடப்பட்டது. BT ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.6850 முதல் அதிக பட்சமாக ரூ.7899 வரையிலும், DCH ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.9569 முதல் அதிக பட்சமாக ரூ.12089 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ.4450 முதல் ரூ.5700 விலை விற்று தீர்ந்து மொத்தம் ரூ.43.50 லட்சத்துக்கு விற்பனை நடைப்பெற்றது.

Tags

Next Story