எடப்பாடி : :ரூ.35 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி விற்பனை
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.35 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று நடைபெற்ற பருத்தி டெண்டரில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 65 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 1700 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம் 550 லாட்டுகளாக வைத்து ஏலம் விடப்பட்டது. BT ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 6250 முதல் அதிக பட்சமாக ரூபாய் 7450 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ3950 முதல் ரூ5250விலைக்கும் விற்பனையானது. இன்றைய சந்தையில் மொத்தம் 35 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
Next Story