சேலம் மாவட்ட மழை நிலவரம்
சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கனமழை பெய்த நிலையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கரியக்கோவில் பகுதியில் 69 மில்லி மீட்டர் (6.9 சென்டிமீட்டர்) மழை பதிவாகியது. அதன்படி மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) ஏற்காடு -28.6, வாழப்பாடி-31.6, அணைமேடு-10, ஆத்தூர்-6, கெங்கவல்லி-20, தம்மம்பட்டி-8, ஏத்தாப்பூர்-22.6, வீரகனூர்-6, நத்தக்கரை 10, சங்ககிரி-14.4, எடப்பாடி-33, மேட்டூர்-16.2, ஓமலூர்-15.6, டேனிஷ்பேட்டை-2.6.
Next Story