சேலம் மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி 18ஆம் தேதி தொடக்கம்

சேலம் மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி 18ஆம் தேதி தொடக்கம்

சேலம் ஆட்சியர்

சேலம் மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி 18-ந் தேதி தொடங்குகிறது

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வருகிற 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் வருகிற 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை ஜமாபந்தி முகாம் நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா,

வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை, சாதி சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, ஆதரவற்ற விதவை சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம், தெரு விளக்கு,

சாலை வசதி, பசுமை வீடு, சிறு குறு விவசாயி சான்று மற்றும் இதர மனுக்களையும் விண்ணப்பித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. சேலம் டவுன் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் வாழப்பாடி தாலுகா அலுவலகத்திலும் ஜமாபந்தி நடக்கிறது. மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி தலைமையில் ஓமலூர் தாலுகா அலுவலகத்திலும்,

சேலம் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் தலைமையில் ஏற்காடு தாலுகா அலுவலகத்திலும் ஜமாபந்தி நடைபெறவுள்ளன.

Tags

Next Story