சேலம் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

சேலம்  திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

வேட்பாளர் அறிமுகம்

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் சேலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சேலம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான, டி.எம்.செல்வகணபதியை அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து திமுக முதன்மை செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சேலம் வேட்பாளர் செல்வகணபதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் தீவிரமாக பணியாற்றிட வேண்டும். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமான தேர்தலாக இந்த தேர்தல் அமையும் என்றும், இந்த தேர்தலில் மூலமாக கிடைக்க கூடிய வெற்றி சேலம் மாவட்டத்தில் மீண்டும் 11 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற கூடிய தேர்தலாக அமையும் என்றும் பேசினார்.

மேலும் சேலம் மாவட்டத்தை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் காலத்தை போல திமுகவின் கோட்டையாக மாற்றிட இந்த தேர்தல் அச்சரமாக அமையும் என்றும், சாதாரண தொண்டரும் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் போன்ற உயர் பதவிக்கு நிச்சயம் வருவார்கள் என்றும் பேசினார்.

Tags

Next Story