இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் சார்பில் திமுக ஆலோசனைக் கூட்டம்.

இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் சார்பில் திமுக ஆலோசனைக் கூட்டம்.

திமுக ஆலோசனை கூட்டம்

திமுகவின் சாதனைகள் குறித்து மக்களிடையே விளக்க ஆலோசனை கூட்டம்

மேட்டூர் அருகே நவப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம். செல்வகணபதி தலைமை வகித்தார். இதில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடுவீடாகச் செல்லும் பரப்புரையில் ஈடுபடுதல், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது, திமுக அரசின் சாதனைகள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சம்பத்குமார் நகர செயலாளர் காசி விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் அர்த்தநாரீஸ்வரன், மிதுன்சக்கரவர்த்தி, சீனிவாச பெருமாள், நகரம், பேரூர், ஒன்றிய கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 1000-கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story