சேலத்தில் மருந்துக்கடை ஊழியரை காரில் கடத்தி மிரட்டல்: 6 பேர் கைது

சேலத்தில்  மருந்துக்கடை ஊழியரை காரில் கடத்தி மிரட்டல்: 6 பேர் கைது

காவல் நிலையம்

சேலத்தில் வாங்கிய கடனை கொடுக்காததால் மருந்துக்கடை ஊழியரை காரில் கடத்தி மிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் கிச்சிப்பாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). இவர் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சதீஷ்குமார் தொழில் தொடங்குவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதில் ரூ.2 லட்சத்தை மட்டும் அவருக்கு திருப்பி கொடுத்துள்ளார். சரவணன் பலமுறை கேட்டும் மீதமுள்ள தொகையை கொடுக்காமல் அவர் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் சதீஷ்குமாரை காரில் கடத்தி சென்று பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்தனர்.

பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். போலீசார் விசாரணை அப்போது அவர்களிடம் சதீஷ்குமாரிடம் 2 மாதத்தில் வாங்கிய கடனை கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை இரவில் பனமரத்துப்பட்டி பிரிவு ரோட்டில் விட்டுவிட்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து சதீஷ்குமார் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சரவணன், பூபாலன், கார்த்திக் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story