எடப்பாடி : கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தேங்காய் பருப்பு ஏலம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தேங்காய் பருப்பு ரூ.16.15 லட்சத்திற்கு ஏலம் போனது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்ற தேங்காய் பருப்பு கொப்பரை தேங்காய் டெண்டரில் சேலம், நாமக்கல், ஈரோடு, மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 170 கொப்பரை தேங்காய் பருப்பு மூட்டைகள் விவசாயிகளால் கொண்டுவரப்பட்டு மொத்தம் 85 லாட்டுகளாக வைத்து ஏலம் விடப்பட்டது. முதல் தரம் தேங்காய் பருப்பு ஒரு கிலோவுக்கு ரூ 71.75 முதல் 85 35 வரையிலும், இரண்டாம் தரம் ரூ 56.25 முதல் 68.55 வரையிலும் ஏலம் போனது. கொண்டுவரப்பட்ட தேங்காய்ப் பருப்புகள் மொத்தம் 16.15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
Next Story