சேலம் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனை

சேலம் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனை

சேலம் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சேலம் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சேலம் கடைவீதி பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நேற்று சில பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. எனினும் விலையை பொருட்படுத்தாமல் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.400-க்கு விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.600-க்கும், கிலோ ரூ.350-க்கு விற்ற சன்னமல்லி ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி கிலோ ரூ.200-க்கும், காக்கட்டான், மலைக்காக்கட்டான் கிலோ ரூ.300-க்கும், கலர் காக்கட்டான் ரூ.200-க்கும், அரளி, வெள்ளை அரளி ஆகியவை தலா ரூ.140-க்கும், செவ்வரளி ரூ.240-க்கும், நத்தியாவட்டம் ரூ.150-க்கும் விற்பனையானது.

Tags

Next Story