ஜி.கே. வாசனிற்கு சிறப்பான வரவேற்பு அளித்த தொண்டர்கள்

ஜி.கே. வாசனிற்கு சிறப்பான வரவேற்பு அளித்த தொண்டர்கள்

ஜிகே வாசனிற்கு வரவேற்பு

சேலத்திற்கு வருகை தந்த த.மா.கா. கட்சி தலைவர் ஜி.கே.வாசன்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சேலம் வந்தார். அவருக்கு புறநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் அயோத்தியாப்பட்டணம் அருகே 7-வது மைல் பகுதியில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு புறநகர் மாவட்ட த.மா.கா. தலைவர் வக்கீல் செல்வம் ஜி.கே.வாசனுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாநில துணைத்தலைவருமான வைத்திலிங்கம் மூத்த தலைவர் வாழப்பாடி சொக்கலிங்கம், ஆட்டையாம்பட்டி நகர தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story