சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குடல் நோய்க்கு நவீன சிகிச்சை பிரிவு தொடக்கம்....

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குடல் நோய்க்கு நவீன சிகிச்சை பிரிவு தொடக்கம்....

குடல் நோய்க்கு நவீன சிகிச்சை பிரிவு தொடக்கம்

சேலம் மோகன்குமாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் குடல், கணையம், கல்லீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் மேம்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் மோகன்குமாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் குடல், கணையம், கல்லீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் மேம்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

அதாவது ஆஸ்டமி கேர் கிளினிக் எனப்படும் இந்த சிகிச்சை பிரிவை அரசு ஆஸ்பத்திரி டீன் மணி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குடல், கணையம், கல்லீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நவீன சிகிச்சை பிரிவு குறித்து டீன் மணி கூறியதாவது:- ஆஸ்டமி என்றால் குடல் சார்ந்த நோயால் குடல் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அடைப்பை நீக்கி, இயற்கை உபாதை செல்வதற்காக மாற்றுப்பாதையில் குடலை வெளியே கொணர்ந்து மலப்பேழை (குடல் டியூப்) ஏற்படுத்துவதை ஆஸ்டமி என்று கூறுகிறோம்.

இது மலக்குடல் புற்றுநோய் உள்பட குடல் சார்ந்த நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆஸ்டமியை சரிவர பாதுகாக்காவிட்டால் வயிற்றின் தோல் பகுதியில் புண், துர்நாற்றம் போன்ற பக்க விளைவுகள் வரலாம்.

இந்த ஆஸ்டமி உள்ளவர்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களிடம் தன்னம்பிக்கையை கொடுத்து இயல்பான வாழ்க்கை வாழ உதவி செய்வது என்ற நோக்கத்துடன் இந்த ஆஸ்டமி கேர் கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

அதற்கு பொருத்தப்படும் மலப்பேழை இலவசமாக ஏழைகளுக்கு இந்த கிளினிக்கில் வழங்கப்படுகிறது. இந்த சேவையை சேலம் உள்பட 8 மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் தான் இந்த கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story