சேலம் அரசு மகளிர் கல்லூரி விளையாட்டு விழா
சேலம் அரசு மகளிர் கல்லூரி விளையாட்டு விழா
சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி 45-ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் சிவகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக ஒலிம்பியன் அர்ஜூனா விருது பெற்ற தென்னக ரெயில்வே அதிகாரி வி.தேவராஜன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது.
விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கிடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்த்துறை மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர். 2-ம் இடத்தை வணிகவியல் துறை மாணவிகள் பெற்றனர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி ஹெப்சி ஜோஸ்பின் நன்றி கூறினார். முன்னதாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அணி வகுப்பு கோலாகலமாக நடந்தது.