சேலம் : குண்டுமல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

சேலம் :  குண்டுமல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

பூ மார்க்கெட் 

சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் குண்டு மல்லி, சன்ன மல்லி கிலோ ரூ.1000 க்கும், ஜாதி மல்லி கிலோ ரூ.480க்கும் விறபனையானது.
சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, கன்னங்குறிச்சி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்பட பல பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகையன்று பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. குறிப்பாக குண்டுமல்லி, சன்னமல்லி ஆகிய பூக்கள் கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் தாண்டி விற்பனை செய்யப்பட்டது. பின்னர் பூக்கள் விலை சற்று குறைந்தது. இந்த நிலையில் சேலத்தில் நேற்று பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி, சன்னமல்லி ஆகிய பூக்கள் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஜாதிமல்லி கிலோ ரூ.480-க்கும், காக்கட்டான் ரூ.160-க்கும், , கலர் காக்கட்டான் ரூ.120-க்கும், செவ்வரளி ரூ.160-க்கும், வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ஆகியவை ரூ.100-க்கும், அரளி ரூ.100-க்கும், சாதா சம்பங்கி ரூ.60-க்கும், நந்தி வட்டம் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story