நாய் செருப்பை கடித்ததால் ஏற்பட்ட மோதலில் 17பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தின்னப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த தங்கராஜ் மகன் கண்ணனுக்கும், அதேபகுதியில் வசிக்கும் மாரி என்பவருடைய மகன் கிருஷ்ணன் என்பவருக்கும் இடையே தடவழி பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் கண்ணன் வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் நாய்க்குட்டி குழந்தைகளை துரத்தி அவரது அண்ணன் செருப்பை கடித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த சம்பவத்தில் அக்கம்பக்கத்தை சேர்ந்த படுகாயமடைந்தவர்கள் 9 பேரை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்பு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இருதரப்பினரும் மாறி, மாறி கொடுத்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் 17பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.