கோட்டை மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும். எட்டு பட்டிக்கும் நாயகியாக விளங்கக்கூடிய கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள் ஆராதனைகள் நடைபெறும். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டைக்கு மாரியம்மன் கோவிலில் இந்த மாதம் 27ஆம் தேதி கும்பாபிஷேக வைபவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கோவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் இன்று கொடி மரம் நிறுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது, தொடர்ந்து மகா கணபதி ஹோமம், முளைப்பாரி இடுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்ற பின்னர் கொடி மரத்திற்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கொடி மரம் நிறுவப்படும் இடத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் பதியப்பட்டது குருக்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து கொடி மரம் மறைகள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க திருக்கோவில் முன்பு நிறுவப்பட்டது கொடிமரம் நிறுவும் நிகழ்ச்சிக்கு பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர்.கொடி மரத்திற்கும் அம்மனுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து யாகசாலை பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன நாளை அஷ்டப்பலி பூஜை நடைபெறுகிறது. 24ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் 25ஆம் தேதி விக்ரங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும் வேள்வி வழிபாடு மற்றும் 26ம் தேதி ராஜகோபுரம் விமானங்களில் கலசங்கள் பொருத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி கோட்டை மாரியம்மனுக்கு கும்பாபிஷேக வைபவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாட்டினை அறங்காவல் குழு தலைவர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story