சேலம் : லாரி - மினி வேன் மோதல் - 3 பேர் உயிரிழப்பு

சேலம் : லாரி - மினி வேன் மோதல் - 3 பேர் உயிரிழப்பு

விபத்து

சென்னையிலிருந்து சேலத்தை நோக்கி மகேந்திரா வேன் வந்து கொண்டிருந்தது. சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் புதுப்பாளையம் மேம்பாலம் பகுதியில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் மகேந்திரா வேன் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து விபத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த மூன்று பேரையும் மீட்டனர்.

மகேந்திரா வேன் டிரைவர் பிரகாஷ் (46) அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த சுதர்சன் (41) ,பிரவீன் குமார் (27) ஆகியோரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். லாரியை ஒட்டிய பச்சமுத்து (41) சிறுகாயத்துடன் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து ஏற்பட்ட வாகனங்களை ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இந்த விபத்து குறித்து காரிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story