மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருக்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்திற்கு சங்கத்தின் வட்ட கிளை தலைவர் ஆ.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையில் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. பணியை புறக்கணித்து வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடு வருவதால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிக்கு வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.