அகில இந்திய செஸ் பாக்சிங் சங்க பொருளாளராக சேலம் பைஜ் அஹமது தேர்வு
தேர்வு சான்றிதழ்
அகில இந்திய செஸ் பாக்சிங் சங்க பொருளாளராக சேலம் பைஜ் அஹமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான சான்றிதழை, அகில இந்திய தலைவர் மோண்டுதாஸ், பைஜ்அஹமதுவிடம் வழங்கினார். பைஜ்அஹம்துவை, தேசிய பொதுச்செயலாளர் பிரதீப் மாரிக், மாநில தலைவர் ஜான் ஜோசப், நிர்வாகிகள் பாராட்டினர். பொருளாளராக தேர்வான பைஜ்அஹமது கூறுகையில், சேலத்தில் இருந்து ஏராளமான சர்வதேச வீரர்களை உருவாக்கி உள்ளோம். இந்த பொறுப்பு தமிழ்நாட்டில் இருந்து இன்னும் ஏராளமானவர்களை தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபெற செய்ய உத்வேகம் கொடுக்கிறது என்றார். தமிழ்நாடு மாநில செஸ் பாக்சிங் சங்கபொதுச் செயலாளராகவும், சர்வதேச நடுவராகவும், பயிற்சியாளராகவும் பைஜ் அஹமது உள்ளார்.
Tags
Next Story