சேலம் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் அண்ணாதுரை வாக்கு சேகரிப்பு

சேலம் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் அண்ணாதுரை   வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

சேலம் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் அண்ணாதுரை விசைத்தறி ஓட்டி தறி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் நாடாளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக அண்ணாதுரை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சாலையோர கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் நூதன பிரச்சாரம் மேற்கொண்டார். கருங்கல் பட்டியல் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் பவர்லூம் தறி ஓட்டி தறி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் அருள் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story