சேலம் பேர்லேண்ட்ஸ் ஹோலி ஏஞ்சல் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

சேலம் பேர்லேண்ட்ஸ் ஹோலி ஏஞ்சல் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

மாணவிக்கு சான்றிதழ் வழங்கல் 

சேலம் பேர்லேண்ட்ஸ் ஹோலி ஏஞ்சல் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

சேலம் நியு பேர்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள ஹோலி ஏஞ்சல் பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் ஜான்சி அகஸ்டின் வரவேற்றார். நிறுவனங்களில் தாளாளர் சுஜிதா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு மறை மாநில மரியாளின் பிரான்சிஸ்டர்கன் ஊழியர் சபை தலைவி மிரியம், அருள் எம்.எல்.ஏ., சேலம் சண்முகா மருத்துவமனை நிறுவன தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் மாணவிகளுக்கு நடனம், பேச்சு, மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஹோலி ஏஞ்சல் பப்ளிக் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags

Next Story