சேலத்தில் விஷம் குடித்த பெண் சாவு

சேலத்தில் விஷம் குடித்த பெண் சாவு

பெண் தற்கொலை

சேலம் மாவட்டம், கம்மாளப்பட்டி பகுதியில் கணவர் வேலைக்கு செல்லாத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி நிலபாலிகாடு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி சரோஜா (வயது 52). சின்னத்தம்பி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சரோஜா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story