சேலம் : அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பொது கலந்தாய்வு

சேலம் : அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பொது கலந்தாய்வு

பைல் படம் 

சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இந்தாண்டு இளங்கலை பாடப்பிரிவு மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது என்று கல்லூரி முதல்வர் காந்திமதி தெரிவித்து உள்ளார்.

சேலம் அரசு மகளிர் கல்லூரியில் 2024, 25-ம் கல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. அதன்படி அன்று இளங்கலை கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், புள்ளியியல், நுண்ணுயிரியல் பாடப்பிரிவுகளுக்கு நடக்கிறது. இதில் பிளஸ்-2 தேர்வில் 400 மதிப்பெண்கள் முதல் 275 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

தாவரவியல் பாடப்பிரிவுக்கு 400 மதிப்பெண்கள் முதல் 240 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். அதே போன்று 11-ந்தேதி காலை 9 மணிக்கு இளங்கலை பொருளாதாரம் பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதற்கு 400 முதல் 250 மதிப்பெண்கள் வரையும், பி.காம் பாடப்பிரிவுக்கு 400 முதல் 300 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். 12-ந்தேதி இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவிகள் இணைய வழி விண்ணப்பம், 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்று, மாற்றுச்சான்று, உடல் நல தகுதி தேர்வு, ஆதார் கார்டு, 3 பாஸ்போர்ட் போட்டோக்கள் கொண்டு வரவேண்டும். இந்த தகவலை அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் காந்திமதி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story