சேலம் ரேடிஷன் ஓட்டலில் இலங்கை உணவுத்திருவிழா
உணவு திருவிழா
சேலம் ரேடிஷன் ஓட்டலில் இலங்கை உணவுத்திருவிழா நேற்று தொடங்கியது. இது குறித்து ஓட்டல் பொது மேலாளர் மதுசூதனன், விற்பனை மேலாளர் பாரதிராஜா, தலைமை சமையல் வல்லுனர் அரவிந்தன் ஆகியோர் கூறியதாவது:- சேலத்தில் முதல் முறையாக இலங்கை உணவு திருவிழா ரேடிஷன் ஓட்டலில் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த உணவுத்திருவிழா வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் இரவு 7 மணிக்கு தொடங்கி 11 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் மதியம், இரவு என 2 வேளை நடைபெறும். சைவ வகையில் சாப்பாடு, பருப்பு வடை, பிரைடு மஸ்ரூம், கீரை என 6 வகை இலங்கை உணவுகளும், அசைவத்தில் இலங்கையின் பிரசித்தி பெற்ற ஜாப்னா மட்டன் பிரியாணி, சிக்கன் பெப்பர் சீடு, மட்டன் பிளாக்கறி, ஆப்பம், மீனில் தயாரிக்கப்படும் மீன் அம்புல் தியால், இலங்கை கொத்து புரோட்டா மற்றும் கடல் உணவுகள் போன்ற 8 வகையான இலங்கை உணவுகள் இடம் பெறும். தேங்காய் பாலில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், கருப்பட்டி சேர்க்கப்பட்ட ஆப்பம் உள்ளன. இந்த உணவு வகைகளை நேரடியாக தயாரித்து வழங்குவதற்காக இலங்கை ரேடிஷன் ஓட்டல் தலைமை சமையல் வல்லுனர் விஜேரத்னே தலைமையில் சமையல் கலைஞர்கள் சமைத்து வழங்குகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.