சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
சின்னசேலம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு இந்திய ரயில்வே துறை சார்பில் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 11.85 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. சின்னசேலம் ரயில் நிலையத்தில் ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றம், பூங்கா அமைத்தல், நடைபாதை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, பயணிகள் தங்கும் அறை, நடைமேடையில் தகவல் பலகை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நவீன முறையில் நடைபெற்று வருகிறது. இன்று இப்பணிகளை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் வருகை தந்த அவர் சின்னசேலம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீன முறையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் ரயில்வே துறை அலுவலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். சின்னசேலம் ரயில் நிலைய மேலாளர் பதிதாபாபன் நாயக் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story