ரூ.4 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

ரூ.4 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

ஆணையர் பாலசந்தர் 

சேலம் சக்திநகர் பகுதியில் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான பூங்கா நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
சேலம் மாநகராட்சி அய்யந்திருமாளிகை சக்திநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 7 ஆயிரத்து 500 சதுர அடி பூங்கா நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த நிலத்தை மீட்பதற்காக சென்னை ஐகோர்ட்டில் மாநகராட்சி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி தலைமையில் நகரமைப்பிரிவு அலுவலர்கள், பணியாளர்கள் குழுவினர் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்பட்டது. அதன்படி ரூ.4 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு அந்த இடம் முழுவதும் கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story