சிலம்பம் சுற்றி வீரத்தை வெளிப்படுத்திய பள்ளி மாணவ, மாணவிகள்

சிலம்பம் சுற்றி வீரத்தை வெளிப்படுத்திய பள்ளி மாணவ, மாணவிகள்

பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

மாணவ, மாணவிகள் ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஜிஇடி மெட்ரிக் மற்றும் சிபிசி பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் 500 மாணவ மாணவிகளை வைத்து Get women's Day 2024 என்று மாணவ மாணவியர்கள் உதவியுடன் வரைந்து சாகசம் செய்து காட்டினர்.

நிகழ்வில் 200 மாணவ மாணவிகள் உலக சாதனை படைக்கும் வகையில் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். சாதனைக்காக ஜெட்லி புக் ஆப் ரெட் கார்ட்ஸ் குழுவினர் இதனை பார்வையிட்டு மாணவ, மாணவிகள் ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றியதற்கு பாராட்டு தெரிவித்து, கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கினர்.

மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு அனைவரும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.இதனை அடுத்து பள்ளியின் நிர்வாக தலைவர் சதீஷ் கனகதிற்கு ஜெட்லி புக் ஆப் ரெட் கிராஸ் சார்பில் கேடயம் மற்றும் சான்றுகள் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story