சேலம் : தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், சாலைகள், குடி யிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து துறை அலுவலர்களும் நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் நேற்று லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. குறிப்பாக, பிரட், பிஸ்கெட் பாக்கெட், வாட்டர் பாட்டில் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பாக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தால் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் பாலச்சந்தர் ஆகியோர் இந்த நிவாரண பொருட்களை பார்வையிட்டு அனுப்பி வைத்தார். அப்போது மாநகராட்சி அலுவலர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன்,சித்தேஸ்வரன், சந்திரன், கோபிநாத், ஆனந்தகுமார் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.