சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ. அறிவியல் செயல்திட்ட கண்காட்சி செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

புதுடெல்லி நொய்டாவில் தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ. அறிவியல் செயல்திட்ட கண்காட்சி நடந்தது.இதில் செந்தில் பப்ளிக் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
புதுடெல்லி நொய்டாவில் தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ. அறிவியல் செயல்திட்ட கண்காட்சி நடந்தது. இதில் செந்தில் பப்ளிக் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. அதாவது பள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட் ஹோம் செயல்திட்டம், அதன் கண்டுபிடிப்பு உத்திகள், ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் நிலையான தீர்வுகளுக்கான அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியது. 8-ம் வகுப்பு மாணவர்கள் லுவனிஷ், நிஷ்வந்த் ஆகியோர் தேசிய அளவிலான சிறப்பான திட்டங்களில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். சாதனை மாணவர்களையும், ரோபோட்டிக்ஸ் பயிற்சியாளர் கிரிதரையும், பள்ளி நிர்வாக தலைவர் செந்தில் சி.கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி, முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரேசன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி மற்றும் அனைத்து கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் பாராட்டினர்.

Tags

Next Story