சிறுதானிய சமையல் போட்டி முன்பதிவு செய்ய நாளை கடைசி நாள்
சிறுதானிய உணவுகள்
சேலம் மாமாங்கம் ரேடிசன் ஓட்டலில் சேலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் சார்பில் மகளிர் தின விழா சிறுதானிய சமையல் போட்டி வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சிறுதானியங்களை கொண்டு தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் மகளிருக்கு அருமையான பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. மகளிருக்கு பதிவுக்கட்டணம் ரூ.500. போட்டியில் பங்கேற்கும் பெண்கள், சிறுதானியத்தை மூலப்பொருளாக கொண்டு படைப்புத்திறனுடன் சமைத்த புதுமையான உணவை இரு நபர் உண்ணும் அளவில் வீட்டிலேயே சமைத்து எடுத்து வந்து ஓட்டல் ரேடிசனின் காட்சிக்கு வைக்க வேண்டும்.
உணவுடன் அதன் செய்முறை விளக்கம் மற்றும் சமைக்க தேவைப்படும் நேரம் பற்றிய விளக்கம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல், 2-ம் பரிசும், கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசும் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டிய கடைசிநாள் நாளை (வியாழக்கிழமை). மேலும் விவரங்களுக்கு 94888 06999 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சேலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.